Basic Info: Tamil

TWC2 என்றால் என்ன?

திரான்ஸியண்ட் வேர்க்கர்ஸ் கவுண்ட் தூ (TWC2) என்பது சிங்கப்பூரிலுள்ள ஓர் அரசு சாராத நிறுவனமாகும். சிங்கப்பூரில் வேலை சம்பந்தப்பட்ட சங்கடங்களை எதிர்நோக்கும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். எங்கள் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

நாங்கள் மனிதவள அமைச்சுடன் சேர்ந்து, நீங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு காண முயல்கிறோம். அனைத்து பிரச்னைகளையும் வெற்றிகரமாக தீர்க்க இயலாது. ஆனால், எங்கள் உதவியுடன் நீங்கள், உங்கள் பிரச்னைக்கான அனைத்து வழிமுறைகள் மற்றும் தீர்வுகளை பரிசோதிக்கலாம் அல்லது முயற்சிக்கலாம்.

எங்களிடம் யார் உதவி பெறலாம்?

TWC2 சிங்கப்பூரில் வேலை செய்யும் அனைத்து வெளிநாட்டினருக்கும் உதவி அளிக்கிறது. இதில் வேர்க் பெர்மிட் (work permit) மற்று எஸ்-பாஸ் (s-pass) உள்ளவர்களும் அடங்குவர்.

சட்டத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும்

வெளிநாட்டு பணியாளர்கள் அநேகமாக சட்டத்தை அறிவதில்லை. ஆனால், நாங்கள், TWC2 அறிவோம். மேலும், 2004-ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் வெளிநாட்டு பணியாளர்களுக்கு உதவி வருகிறோம். உங்கள் உரிமை என்ன, உங்களுக்கு என்ன வழிமுறைகள் உள்ளன, அவற்றின் செயல்முறை என்ன என்பதை பற்றி உங்களுக்கு நாங்கள் ஆலோசனை கூற முடியும்.

வழக்கறிஞர்கள் தேவை இல்லை

சட்டத்தை அறிந்துக் கொள்ளுவது முக்கியம் என்றாலும், வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, நீங்கள் வழக்கறிஞர்களை அமர்த்த வேண்டியதில்லை. வேலை பிரச்னைகள், வழக்கமாக நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்படுவதில்லை. மனிதவள அமைச்சின் மூலம்தான் தீர்க்கப்படுகின்றன. அதனால்தான், வழக்கறிஞர்கள் தேவையில்லை. அதற்கு பதிலாக உங்கள் உரிமையை நீங்கள் கோர, உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் TWC2 உங்களுக்கு வழங்கும். மேலும், MOM தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. TWC2 உங்களுக்கு இலவசமாக உதவும்.

வழக்கறிஞர்களோ, இதற்கு மாறாக, தங்கள் சேவைக்காக உங்களிடமிருந்து நிறைய தொகையை வசூலிப்பார்கள்.

நாங்கள் எப்படி உதவுவோம்?

வெளிநாட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் மூன்று பொதுவான பிரச்னைகள் என்னவென்றால்:

  • கொடுக்கப்படாத சம்பளம்
  • ஒப்பந்தத்தில் முரண்பாடுகள்
  • காயம்

கொடுக்கப்படாத சம்பளம்

உங்களுக்கு சம்பளம் சரியாக கொடுக்கப்படாத வேளையில், உங்கள் முதலாளி உங்களுக்கு கொடுக்க வேண்டிய சரியான சம்பள தொகைக்கான ஆதாரத்தை எப்படி தேடுவது அல்லது சேகரிப்பது என்று TWC2 ஆலோசனை வழங்கும். பின்பு, உங்கள் முதலாளி  உங்களுக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறார் என்று சரியாக கணக்கிடுவதற்கும் நாங்கள் உதவுவோம். இதில் அதிக நேர ஊதியம், விடுமுறை ஊதியம், மேலும் வருடாந்திர விடுமுறை ஆகியவற்றையும் அடங்கும். நீங்கள் சட்டத்தில் கூறியபடி பார்முலாவைக் கொண்டு சரியாக கணக்கிட வேண்டும். இங்கு TWC2 உங்களுக்கு உதவும். மனிதவள அமைச்சு உங்களுக்கு கணக்கிட்டு இருந்தாலும், தவறாக இருந்தால் TWC2 சரிபார்க்க உதவும்.

பின்னர் மனிதவள அமைச்சு உங்கள் முதலாளி, உங்களுக்கு இடையில் மீட்டிங்கள் ஏற்படும். நாங்கள் எப்படி உங்கள் வழக்கை வாதாடலாம் அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் என்று கற்றுக்கொடுப்போம். முதலாளி பின்னர், சம்பள தொகையை கொடுக்காவிட்டால் இந்த விஷயத்தை மேலும் எடுத்துச் சொல்ல நாங்கள் உதவுவோம்.

நீங்கள் புதிய வேலை கூட தேட நேரலாம். நீங்கள் புதிய வேலை தேட மனிதவள அமைச்சிடம் அனுமதி கோர நாங்கள் உதவுவோம். நீங்கள் அனுமதி வாங்கியபின்தான் வேலை தேடலாம்.

ஆனால், TWC2 ஒரு வேலை ஏஜண்ட் அல்ல (எங்களுக்கு அதற்குரிய உரிமம் இல்லை). ஆனால், மனிதவள அமைச்சிடம் அனுமதி பெற எங்களால் உதவ முடியும்.

ஒப்பந்த முரண்பாடுகள்

சிங்கப்பூரில் பல ஆவணங்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் என்ன கூறப்படுகிறது என்று புரிந்துக் கொள்ள உங்களுக்கு கடினமாக இருக்கலாம். உதாரணமாக உங்களிடம் ஒரு வேலை ஒப்பந்தம் இருக்கலாம். ஆனால் அதில் உள்ள விவரங்கள் என்னவென்று உங்களுக்கு சரியாக தெரியாமல் இருக்கலாம். TWC2 அதை கவனமாக படித்து உங்களிடம் விளக்கும்.

எதாவது ஒரு விவரத்தில் முரண்பாடு தெரிந்தால், உங்களின் உரிமை என்னவென்று நாங்கள் விளக்குவதோடு, அதற்கு எப்படி தீர்வு காணலாம் என்று பரிந்துரைப்போம்.

உதாரணமாக சில பணியாளர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீடு திரும்ப விரும்புவார்கள். ஆனால், ஒப்பந்தத்தில் இதற்கு அனுமதி உள்ளதா? மற்ற சிலரோ, அதிக நேரம் வேலை செய்ய ஆளாக்கப்படுகிறார்கள், வாரத்தில் ஏழு நாட்களும். முதலாளிகளோ, இது ஒப்பந்தத்தில் உள்ளது என்று கூறுவார்கள். TWC2-க்கு வாருங்கள். நாங்கள், ஒரு தீர்வை கண்டுபிடிக்க உதவுவோம்.

காயம்

காயம் படுவது ஒரு அதி முக்கியமான பிரச்சனை. உங்களால் வேலை செய்ய இயலாமல் போவதோடு உங்களுக்கு மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும். இது சிங்கப்பூரில் விலை உயர்ந்ததாகும். உங்கள் முதலாளி மருத்துவ சிகிச்சையை ஏற்படுத்தி தரவில்லை என்றால், நீங்கள் என்ன செய்யலாம்? TWC2, சட்டப்படி உங்கள் உரிமை என்னவென்று விளக்கமளிப்பதோடு அல்லாமல், உங்களுக்கு சேர வேண்டிய சிகிச்சையையும் பெற உதவுகிறது. வேலையிடத்தில் காயம் ஏற்பட்டு அது உங்களுக்கு நிரந்தர இயலாமையை ஏற்படுத்தியிருந்தால், நீங்கள் இழப்பீட்டுக்கு தகுதி பெறுவீர்கள். TWC2 அதன் செயல்முறையும், என்ன வழிமுறைகளும் உள்ளன என்று ஆலோசனை வழங்கும்.

நிறைய பணியாளர்கள், இதற்காக நிறைய வழக்கறிஞர்களை அமர்த்துகிறார்கள். இது முற்றிலும் தேவையற்றது. மேலும், கிடைக்கும் இழப்பீட்டில், வழக்கறிஞர்கள், அவர்களுக்கு கட்டணமாக சில தொகையை எடுத்துக் கொள்வார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், உங்களுக்கு கிடைக்கும் தொகை குறைந்திடும்.

எப்படி நீங்கள் எங்களை அணுகலாம்?

  1. +65 6297 7564 அல்லது 1800 888 1515, என்ற கைப்பேசி எண்ணில், திங்களிலிருந்து வெள்ளி வரை, காலை 9-லிருந்து இரவு 9 வரை, தொடர்பு கொள்ளலாம்.
  2. நீங்கள் +65 6297 7564 என்னும் எண்ணிற்கு எந்நேரத்திலும் வாட்ஸ் ஆப் மெசெஜ் அனுப்பலாம்.
  3. எங்களது அலுவல எண்ணில், +65 6247 7001 திங்களிலிருந்து வெள்ளி வரை, காலை 9 லிருந்து மாலை 6 வரை, தொடர்பு கொள்ளலாம்.
  4. நீங்கள் எங்கள் அலுவலகத்திற்கு திங்கள்- வெள்ளி வரை, காலை 9 லிருந்து மாலை 5 வரை நேரில் வரலாம். எங்கள் முகவரி,

TWC2,
5001 பீச் ரோட், 09-86
கோல்டன் மைல்ஸ் காம்பளக்ஸ்
சிங்கப்பூர் 199588.

கீழ்கண்ட வரைப்படத்தை பார்க்கவும். இவை எங்கள் அலுவலகத்திற்கு அருகிலுள்ள எம்.ஆர்.டி நிலையங்களை காட்டுகின்றது.

What is TWC2?

Transient Workers Count Too (TWC2) is a non-government charity organisation in Singapore. We assist foreign workers who are facing difficulties in relation to their employment in Singapore. We do not charge for our assistance.

We work closely with the Ministry of Manpower (MOM) to get the best possible solution for your case. Not all cases can be solved successfully, but with our help, all possible solutions will be explored/tried.

Who we help

TWC2 provides assistance to all foreigners working in Singapore. This includes those on Work Permits and S-Passes.

Need to know the law

Foreign workers usually do not know the law. But TWC2 knows, and we have been helping workers since 2004. We can advise you what your rights are, what your options are, and what the process will be for your case.

No need for lawyers

Although it is important to know the law, you do not need to engage a lawyer for employment problems. Employment problems are not usually solved through the courts but solved through MOM. That is why no lawyer is needed. Instead, TWC2 will give you all the information you need to fight for your rights, and help you communicate with MOM. TWC2 will help you for free.

Lawyers, on the other hand, will charge you a lot of money for their services.

How we help

The three most common types of problems faced by foreign workers are:

  • Salary non-payment
  • Contract disputes
  • Injury

Salary non-payment

In cases of salary non-payment, TWC2 will advise you how to get evidence of the correct salary that the employer should have paid you. Then we will help you calculate exactly how much your employer owes you. This includes overtime pay, holiday pay and annual leave. You must calculate correctly using the formula in the law, and this is where TWC2 can assist you. Even if MOM calculates for you, sometimes a mistake is made, and TWC2 will check the calculation for you.

Then there will be meetings at MOM between you and your employer. We will teach you how to argue your case and how to present evidence.

If the employer still does not pay, we will help you take the matter further at MOM.

You may also want to get a new job. TWC2 will help you ask MOM for permission to look for a new job. You need to get that permission before you can do so.

However, TWC2 is not an employment agent (we do not have a licence), but we can help you get the permission from MOM.

Contract disputes

Many documents in Singapore are written in English. You may find it difficult to understand what they say. For example, you may have an employment contract and you are not sure about the details. TWC2 will read it carefully and explain it to you.

If you have some dispute about a detail in the document, we can advise you what your rights are, and suggest a way to solve it.

For example, some workers just want to resign and go home, but does the contract allow it? Other workers find that they are made to work very long hours, seven days a week, and the boss says it is in the contract. Come to TWC2 and we will help you find a solution.

Injury

Suffering an injury is a very serious problem. Not only will you not be able to work, you need medical treatment which is very expensive in Singapore. If your employer does not provide you with medical treatment, what can you do? TWC2 will advise you about your rights under the law, and help you get the medical treatment you need.

An injury that took place at work and that leaves you with a permanent disability will be eligible for compensation. TWC2 will advise you what the process is and what your options are.

Many workers engage lawyers for this. It is completely unnecessary. Furthermore, the lawyer will take part of the compensation as his fee. This means that you will get less.

How to find us

  1. You can call +65 6297 7564 or 1800 888 1515 on Mondays to Fridays up from 9am to 9pm.
  2. You can send a WhatsApp message to +65 6297 7564 anytime.
  3. Our office phone number is +65 6247 7001 on Mondays to Fridays from 9am to 6pm.
  4. You can also come to our office on Mondays to Fridays from 9am to 5pm.

Our address is

Transient Workers Count Too
5001 Beach Road, #09-86
Golden Mile Complex
Singapore 199588.

See the map below, which also shows the nearest MRT stations.

உங்களக்கு சம்பள கோரிக்கை இருந்தால்,
இந்த விடியோவை பாருங்கள்.

Watch this video if you have a salary claim:

உங்களக்கு வேலை இடத்தில் விபத்து
ஏற்பட்டு இருந்தால், இந்த விடியோவை பாருங்கள்.

Watch this video about what to do if you have an accident at work: